×

சிவம் துபே அரைசதம் வீண் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப்

மும்பை: நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச முடிவு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் மயாங்க், தவான் களமிறங்கினர். மயாங்க் 4 ரன், பானுகா ராஜபக்ச 9 ரன் எடுத்து வெளியேற, தவான் – லிவிங்ஸ்டன் ஜோடி 3வது விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 95 ரன் சேர்த்தது. குறிப்பாக, பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு சென்னை பந்துவீச்சை சிதறடித்த லிவிங்ஸ்டன் 27 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். தவான் 33 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிங்ஸ்டன் 60 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜிதேஷ் ஷர்மா 26 ரன் எடுத்து (17 பந்து, 3 சிக்சர்) பிரிடோரியஸ் பந்துவீச்சில் உத்தப்பாவிடம் பிடிபட, பஞ்சாப் ஸ்கோர் வேகம் சற்று மட்டுப்பட்டது. ஷாருக் கான் 11 பந்தில் 6 ரன், ஓடியன் ஸ்மித் 7 பந்தில் 3 ரன் எடுத்து ஜார்டன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது.ரபாடா 12 ரன், அரோரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் ஜார்டன், பிரிடோரியஸ் தலா 2, முகேஷ், பிராவோ, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 18 ஓவரில் அனைத்து  விக்கெட்டையும் இழந்து 126  ரன் எடுத்து, 54  ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவியது.  அதிகபட்சமாக சிவம் துபே 57 ரன் (30 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். டோனி 23 ரன், உத்தப்பா, ராயுடு தலா 13 ரன், கேப்டன் ஜடேஜா, மொயின் அலி, பிராவோ ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.   பஞ்சாப் பந்துவீச்சில் சாகர்  3 விக்கெட், அரோரா, லிவிங்ஸ்டன் தலா 2  விக்கெட் எடுத்தனர். பஞ்சாப் 2 புள்ளிகள் பெற்றது….

The post சிவம் துபே அரைசதம் வீண் சென்னையை வீழ்த்தியது பஞ்சாப் appeared first on Dinakaran.

Tags : Sivam Tubey ,Chennai ,Punjab ,Mumbai ,Punjab Kings ,IPL ,Chennai Super Kings ,Shiva ,Dubai ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28...